** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 7 April 2015

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
*
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
*
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
*
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
*
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
*
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
*
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
மேற்கூறிய அனைத்jதும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று...
07/04/2015..செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 8659 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8699என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8633,8600,8575,
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8670,8690,8730
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வங்கி கொடுத்த கடனில் வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்தது ஆகிய வற்றை சேர்க்கும்போது இந்த வங்கி முதலிடத்தில் இருக்கிறது.
இந்த வங்கி கொடுத்த கடனில் 21.5 சதவீத கடன்கள் (சொத்து) பிரச்சினையில் இருக்கிறது. இதற்கடுத்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத்துகளில் 19.04 சதவீதம் பிரச்சினையில் இருக்கிறது. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 18.25 சதவீத சொத்துகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 17.85 சதவீத சொத்துகளும் பிரச்சினையில் இருக்கிறது. இவை டிசம்பர் 31 நிலவரப்படி.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை கொடுத்த கடன்களில்15 சதவீதத்துக்கு மேல் பிரச்சினையாக (வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்யப்பட்டதையும் சேர்த்து) உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கிக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் பெரிய பிரச்சினை தருவதாக உள்ளது.
கடனை மறுசீரமைப்பு செய் தவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலில் இருக்கும் முதல் 30 நபர்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 95,122 கோடி ரூபாய் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடனில் இது மூன்றில் ஒரு பங்காகும். பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் டிசம்பர் 31, 2014 நிலவரப்படி 2,60,531 கோடி ரூபாயாகும்.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
சிந்திக்க........
ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை.சாதிச்சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம்.டிவி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது.ஆனால் அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.
நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது.கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.
----டாக்டர் ஆர் கார்த்திகேயன்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
உரை:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
Translation:
Like staff in hand of him in slippery ground who strays 
Are words from mouth of those who walk in righteous ways.
Explanation:
The words of the good are like a staff in a slippery place.