** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 11 January 2015

http://panguvarthagaulagam.blogspot.in/

தெரிந்துகொள்வோம்...
ஹென்றி டேவிட் தொரேயு---அமெரிக்க தத்துவ ஞானி..
1817 முதல் 1862 வரையிலும் வாழ்ந்த ஒரு அமெரிக்க தத்துவ ஞானி. அவருடைய படைப்புகளில் சுற்றுச்சூழல்தனை அனுசரித்து வாழும் எளிமையான வாழ்க்கை முறையைச் சொல்லும் ’வால்டென்’ என்ற புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்தப் புத்தகத்தில் பகவத்கீதையையும், கங்கை நதியின் புனிதம் பற்றியும் சொல்லியதன் மூலம் இந்திய கலாச்சாரத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பு தெரியவருகின்றது.
அவரது பொன்மொழிகள்..
# உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.
# ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.
# ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.
# குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே.
# நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இன்று கற்றுகொண்டது..நன்றி ஐயா...

ஏ.வி. எம் ஸ்டுடியோ என்ற சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஏ.வி.மெய்யப்பன் மரணப் படுக்கையின் கடைசி நிமிடங்களில் “ ஏன் லைட் வீணாக எரிகிறது? அதை அணையுங்கள்” என்றாராம்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 333: 
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்.
 உரை: 
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
Translation: 
Unenduring is all wealth; if you wealth enjoy, 
Enduring works in working wealth straightway employ.
Explanation: 
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.